சரவண பவன் ஓட்டல்களுக்கு சீல்… மாநகராட்சி அதிரடி

சென்னை:

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஓட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கே.கே நகரில் 1981-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது சரவண பவன் ஓட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. ருசிக்கும், விலைக்கும் பெயர் பெற்றவை இந்த ஓட்டல்கள்

இதன் உரிமையாளர் ராஜகோபால் கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை சென்ற பிறகும் ஓட்டல்கள் தொடர்ந்து செயலபட்டு வந்தது.

இந்நிலையில் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை சீல் வைத்து இழுத்து மூடினர்.

அதேபோல் 9 கிளை ஓட்டல்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரே நாளில் சரவண பவன் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.