துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற சென்னை அணி, இந்தமுறை முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. இந்தமுறை டு பிளசிஸ் உடன் துவக்க வீரராக களமிறங்கியவர் சாம் குர்ரன். அவர் 21 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடக்கம்.
டூ பிளசிஸ் டக் அவுட் ஆனார். ஷேன் வாட்சன் 38 பந்துகளில் 42 ரன்களை மட்டுமே அடித்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடக்கம். அம்பாதி ராயுடு 34 பந்துகளில் 41 ரன்களை அடித்தார்.
கேப்டன் தோனி 13 பந்துகளில் 21 ரன்களையும், ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்களையும் அடித்தனர். ஆக, மொத்தத்தில் இந்தப் போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடியது ஜடேஜா மட்டுமே.
ஆக, மொத்தம் சென்னை அணி, தனது இன்னிங்ஸில் 9 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளை அடித்தது. அதேசமயம், இந்த இன்னிங்ஸில் அதிக டாட் பந்துகளும் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.