இன்றையப் போட்டியில் 20 ஓவர்களில் சென்னை எடுத்த ரன்கள் 114

ஷார்ஜா: மும்பை அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சென்னை அணிக்கு யாரேனும் ‘சூனியம்’ வைத்துவிட்டார்களா? என்று கேள்வியெழுப்பும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்தது. சென்னை அணியிலோ சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ருதுராஜ் கெய்க்வாட், நாராயண் ஜெகதீசன், இம்ரான் தாகிர் உள்ளிட்டோர் இன்றையப் போட்டியில் இடம் பெற்றிருந்தனர். ஷேன் வாட்சனுக்கு இடமில்லை.

துவக்க வீரர் ருதுராஜ் 5 பந்துகளில் எடுத்த ரன்கள் 0. டூ பிளசிஸ் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். நாராயண் ஜெகதீசன் எடுத்தது 0 ரன். கேப்டன் தோனி 16 பந்துகளில் 16 ரன்களை அடித்தார்.

கடைசியில் சாம் கர்ரன் 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களை அடித்தார். இம்ரான் தாகிர் 10 பந்துகளில் 13 ரன்களை அடிக்க, எப்படியே 100 ரன்களைக் கடந்தது சென்ன‍ை அணி.

20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை மட்டுமே எடுத்தது சென்ன‍ை அணி.

மும்பை அணி தரப்பில் பெளல்ட்டுக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன. 4 ஓவர்கள் வீசிய அவர், 1 மெய்டனுடன் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.