சென்னை: கொரோனாவால் தத்தளிக்கும் தலைநகர் சென்னையில் 80 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர்.
கடந்த 7 நாட்களில் மட்டும் 13,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஜூலை 15 முதல் நாள் ஒன்றுக்கு 5000 பேர் குணம் அடைந்துள்ளது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள் சதவீதம் ஜூலை 10ம் தேதி 70 சதவீதத்திலிருந்து ஜூலை 17ம் தேதி வரை 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 10 ஆம் தேதி, மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 4,163 நோயாளிகள் அனுப்பப்பட்டனர். அவர்களில் 2,869 பேர் சென்னையிலிருந்து வந்தவர்கள், அதாவது 68 சதவீதம் பேர்.
ஜூலை 11 அன்று, தமிழகத்தில் 3,591 நோயாளிகள் குணம்பெற்றனர். அவர்களில் 1,791 பேர் சென்னையிலிருந்து வந்தவர்கள், அதாவது 49 சதவீதம் பேர். ஜூலை 12 அன்று, 3,617 நோயாளிகள் குணமடைந்தனர். அவர்களில் 1,668 மீட்பு சென்னையிலிருந்து வந்தவர்கள். அதாவது 46 சதவீதம் ஆகும்.
ஜூலை 13 அன்று, 3,035 நோயாளிகள் குணமாக அவர்களில் 2,079 பேர் சென்னையில் இருந்தவர்கள். அதாவது 68 சதவீதம் ஆகும். இதேபோன்று ஜூலை 14 முதல் 16 வரை சென்னையில் இருந்து மட்டும் 5054 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர்.
குணம் பெற்றவர்களின் சதவீதம் ஒருபக்கம் உயர்ந்தாலும் நகரத்திலிருந்து அதிக இறப்பு விகிதம் தொடர்கிறது. ஒரு வாரத்தில், சென்னை 173 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு 24 க்கும் மேற்பட்ட இறப்புகள் என்று புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.