ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 188 ரன்களை அடித்துள்ளது.

முக்கிய வீரர்கள் யாருமே பெரிய அதிரடியாக விளையாடவில்லை. சாம் கர்ரன் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்அவுட் ஆனார். அதேசமயம், கடைசி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ, 8 பந்துகளில் 20 ரன்களை சேர்த்த காரணத்தால், சென்னையின் ரன் எண்ணிக்கை சற்று வலுவான நிலைக்கு உயர்ந்தது.

மேலும், ராஜஸ்தான் அணி, கூடுதலாக 14 ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள‍ை சேர்த்தது. கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் பிராவோ.

‍டெல்லிக்கு எதிரான தனது முதல் போட்டியில், சென்னை அணி கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ரன்களைத்தான் எடுத்தது. ஆனால், மோசமான பெளலிங் காரணமாக, டெல்லி அணி அந்த எண்ணிக்கையை எளிதாக சேஸ் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றையப் போட்டியில் ராஜஸ்தான அணியை சென்னை கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.