இந்த ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை அணி – 125/5

துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்து, மிகக்குறைந்த இலக்கை நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. ஆனால், அந்த அணியின் அத்தனை பேட்ஸ்மென்களும் ஏதோ ஆடவேண்டும் என்பதுபோல் ஆடினர்.

துவக்க வீரர் சாம் கர்ரன் 25 பந்துகளில் 22 ரன்களை அடித்தார். அம்பாதி ராயுடு 19 பந்துகளில் 13 ரன்களை அடிக்க, அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் கேப்டன் தோனி 28 பந்துகளில் 28 ரன்களையே அடித்தார்.

ஜடேஜா, 30 பந்துகளில் 35 ரன்களை அடிக்க, 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை அணி.

ராஜஸ்தான் அணியின் ஷ்ரேயாஸ் கோபால், 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து வெறும் 14 ரன்கள் மட்டுமே வழங்கியதே சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.