சென்னை: செக்ஸ் டார்ச்சர் செய்த பெண் வக்கீலை கொன்ற இளைஞர்

--

சென்னை:

செக்ஸ் அடிமைபோல நடத்தியதால்  கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று, சென்னை பெண் வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது, அலுவலக விசயமாக அடிக்கடி சந்தித்ததால் இருவருக்கும் இடையே கள்ள  உறவு ஏற்பட்டு, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

தி.நகர் மேற்கு பகுதியில் உள்ள தேவன் காலனியை சேர்ந்த ஐகோர்ட்டு வக்ல்கீ சுதா.  இவரது முழுப்பெயர் லட்சுமி சுதா. இவருக்கு  58 வயதாகிறது.

killed

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்ட சுதா, இறந்து 3 நாட்கள் கழித்தே தெரிய வந்தது. அவரது உடல் அரை நிர்வாணமாக, அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

இதனால் இந்த கொலை நகைக்காக நடைபெறவில்லை என்று சந்தேகமடைந்த போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போதுதான், லட்சுமி சுதா, ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிகிறார் என்றும், இவருக்கு ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது. சுதாவின் மகன் பெங்களூரில் வசித்து வருவதும் தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து, லட்சுமி சுதா வீட்டில் வேலை செய்தவர்கள், தண்ணீர் கேன் போடுவோர், பால் பாக்கெட் போடுவோர், வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வோர்  மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.

விசாரணையின்போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், வக்கீலை பார்க்க ஒருவர் அடிக்கடி வருவார் என்றும், நீண்ட நேரம் கழித்துதான் போவார் என்பதும் தெரிய வந்தது.

இந்த தகவலை அடுத்து போலீசார்,  லட்சுமி சுதாவின் வீட்டுக்கு வந்துபோகிறவர்கள் பற்றிய தகவலை சேகரித்த்னர். அவர் நடத்தும் வழக்கு விவரங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

அப்போதுதான், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் லட்சுமி சுதா சட்ட ஆலோசகராக பணியாற்றியது தெரிய வந்தது. அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அடிக்கடி அலுவலக விசயமாக வந்து செல்வதும் தெரிந்தது.

அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீசார், கொலை செய்தது, நொளம்பூரை சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாக 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது.

விசாரணையின்போது, கார்த்திகேயன் கூறியதாவது:

நான் வேலை செய்யும் இன்சூரன்ஸ் கம்பனியின் சட்ட ஆலோசகராக  லட்சுமி சுதா இருந்ததால், அவரிடம் வழக்கு தொடர்பாக அடிக்கடி பேசி வருவேன். அப்போது எங்களுக்குள்  நட்பு உருவாகி, காதலாக மாறியது என்றார்.

மேலும், முதன்முதலாக  மசாஜ் பார்லர் ஒன்றில்  வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். பார்க்க அழகாக இருப்பார் வயது தெரியாது.  அவரது அழகில் மயங்கினேன். அவரும்  30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால் என்னை ஏற்றுக்கொண்டார். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.

எங்களது கள்ள உறவு மகனுக்க  தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவரை பெங்களூர் அனுப்பி வைத்தார்.  எனக்கும் நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார்.

இதனால் நான் தினசரி அவரது வீட்டுக்கு வருவேன். அவரோடு  உல்லாசமாக இருப்பேன்.  கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைத்தேன்.

ஒரு கட்டத்தில், எனக்கு முடியவில்லை என்றாலும் அவர் என்னை விடுவதில்லை. வலுக்கட்டாயமாக உறவு கொள்ள செய்தார். உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தபட்டேன்.

இதனால், அவரிடம் இருந்து தப்பிக்க வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும், அவர் என்னை விட விரும்பவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார்.

சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார்.

என்னை அவரது வீட்டிலேயே தங்குமாறு கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டினார்.

இதனால் கோபமும், வெறுப்பும் அடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன் அப்போது நான் தயாராக வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி விட்டேன் என்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கள்ளக்காதலால் எனது வாழ்கையை நான் தொலைத்துவிட்டேன் என்றும், எனது குடும்பம் அனாதையாகி விட்டது என்று கார்த்திகேயன் கதறியது பரிதாபமாக இருந்தது.

You may have missed