சென்னை சில்க்ஸ் கட்டிடம் வெடித்து சிதறும் அபாயம்! பொதுமக்கள் வெளியேற்றம்!!

சென்னை,

நேற்று அதிகாலை முதல் தற்போது வரை எரிந்துகொண்டிருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக அருகிலுள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர்.

தீவிபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டித்தின் மேற்பகுதி  இன்று அதிகாலை  இடிந்து விழுந்து நொறுங்கியது. அதைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 7 மணி அளவில் கட்டிட்த்தின் முன்பகுதி யுள்ள அலங்கார செட்டுக்கள் அனைத்தும் தீயில் எரிந்துவெடித்து சிதறியது.

. இதனால் தி.நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக முடங்கிப்போயுள்ளது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீவிபத்து, காலை 7 மணிக்குப் பிறகே சென்னை மக்களுக்கும்  தெரியவந்தது.

முதலில் சாதாரண தீ விபத்து போலத்தான் கருதப்பட்டது. ஆனால் இரண்டாவது நாளாகவும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதை தொலைக்காட்சிகளில், இதை அணைக்க முடியாமல் தமிழக தீயணைப்பு துறையினர் திணறி வருவதை பார்க்கும்போது…. தமிழக தீயணைப்பு துறையினரின் கையாலாகத தனத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

நாட்டில் எத்தனையோ வேதியியல் பொருட்களை கொண்டு பற்றியெறியும் காட்டுத்தீயை சுலபமாக அணைத்து வரும் வேளையில், ஒரு கட்டிடத்தின் தீணை அணைக்க 30 மணி நேரமாகியும் தமிழக தீயணைப்பு துறையினர் திண்டாடி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாவது நாளாக தீ எரிந்துவருவதால், தீநகரை சுற்றியுள்ள பகுதி முழுவதும்  பயங்கரமான புகையால் மூச்சுதிணறல், நெஞ்செரிச்சல் ஏற்படுவதாக  தி.நகர் வாசிகள் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், எரிந்து வரும் வெப்பம் தாங்க முடியாமல் கட்டடத்தின் 4 தளங்கள் இன்று அதிகாலை 3.19 மணிக்கு இடிந்து விழுந்துள்ளன. மேலும் மீதமுள்ள தளங்களும் முற்றிலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது.

இதனை அணைக்க நேற்று முதல் 60க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள ஷிப்ட் முறையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வெப்பம் தாங்க முடியாமல் கடையில் உள்ள கண்ணாடித் துண்டுகள் நேற்று முதல் சிதறி வருகின்றன.

இந்நிலையில் கட்டடத்தின் பல பகுதிகளும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே இடிந்து விழுகிறது.

இதனால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வாகனங்கள் வெளி யேற்றப்பட்டன. கட்டடம் இடிந்து விழத் துவங்கியதால் தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயின் கோர தாண்டவத்தால் கட்டித்திலுள்ள பொருட்கள் வெடித்து சிதறி வருவதால், அருகில் வசிப்போர் மேல்தளங்களில் இருந்து பார்க்க வேண்டாம் என அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போலீசார் அறிவுறுத்தலின் பேரில் சென்னை சில்க்ஸ் அருகில் அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தொடர்ந்து எரியும் தீயால் கட்டிடத்தின்  மற்ற பகுதிகளும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.