சென்னை:

தீ விபத்து ஏற்பட்ட சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடிட இடிபாடுகளில் இருந்து இரு பாதுகாப்பு பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துளளது. இந்த இரு பெட்டகங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்K மற்றும் வரை நகைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில், கடந்த மே 31 அன்று தீ விபத்து ஏற்பட்டது.  அதில், கட்டடத்தின் ஏழு தளங்களும் சேதம் அடைந்தன. இரண்டு நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பிறகு அக் கட்டிடத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து,  பிரம்மாண்டமான  ஜா கட்டர் இயந்திரம்மூலம் கட்டட இடிப்புப் பணிகள் துவங்கின. நேற்று முன்தினம் முழுமையாக இடிக்கப்பட்டது. இதையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.

இந்த நிலையில் இடிபாடுகளில் நகைகளைப் பாதுகாத்து வைக்கும் பெரும் பெட்டகங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நகைக் கடைகளில் தீ விபத்து, வெள்ளம் போன்ற ஆபத்துகளிலிருந்து நகைகளைப் பாதுகாக்க, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பது வழக்கம். தற்போது கிடைத்துள்ள இரு  பெட்டகங்களிலும் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.