பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை! பலாத்காரம் செய்த மாமன் கைது!

ள்ளி தாளாளர், ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த பழனிவேலு. – மகேஸ்வரி தம்பதியரின் மகள் மணிமாலா. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருக்கிறார். கடந்த புதன்கிழமையன்று தனது உடலில் தீவைத்துக்கொண்டார்.  அக்கம் பக்கத்தினர் அவரை   கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.   அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாலா உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கோயம்பேடு காவல நிலைய ஆய்வாளர் அழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மணிமாலா வீட்டை சோதனை செய்தபோது, அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில் தனது தற்கொலைக்குக் காரணம் சரவணன்தான் என்று எழுதிவைத்திருந்தார்.  மணிமாலாவின் தந்தை பழனிவேலுவின் தங்கை கணவர்தான் சரவணன்.

மணிமாலாவின் வீடு இருக்கும் அதே பகுதியில்தான் சரவணனின் வீடும் உள்ளது. அங்கு விளையாட மணிமாலா அவ்வப்போது செல்வார். அப்படி ஒருமுறை சென்றபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து மணிமாலாவை பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்தபோது இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.  இதனால் மணிமாலா இந்த விவகாரத்தை பெற்றோரிடம் கூட சொல்லவில்லை.

இந்த நிலையில் மணிமாலாவுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படவே, மருத்தவரிடம் அழைத்துச் சென்றனர் பெற்றோர். பரிசோதனையின் போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மணிமாலாவை விசாரிக்க, அவர் விசயத்தைச் சொல்லியிருக்கிறார்.

சரவணன் உறவினர் என்பதால் மணிமாலாவின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துப்போயினர். இதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட சரவணன், மீண்டும் மணிமாலாவை அணுகி, இருவரும் சேர்ந்திருந்த போது வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் ஆகவே தனது விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் மனம் வெறுத்த மணிமாலா, சரவணனின் மிரட்டல் குறித்து எழுதிவைத்துவிட்டு தீக்குளித்து  தற்கொலை செய்துகாண்டார்.

இதையடுத்து சரவணனை காவல்துறையினர் கைது செய்தனர். சரவணன், தனியார் பயிற்சிபள்ளி (டியூசன் சென்டர்) நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.