Random image

அமெரிக்கா விருதுக்கு சென்னை மாணவி தேர்வு

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018ம் ஆண்டிற்கான தியேல் ஃபெல்லோஷிப் விருது சென்னையைச் சேர்ந்த மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு (வயது 21) கிடைத்துள்ளது. உலகளவிலான 20 பேர் கொண்ட பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.

ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக உள்ள அபர்ணா, இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார்.

மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் ஏற்படுத்தியுள்ளார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார்.

தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்கவிருதைப் பெறுவதன் மூலம் உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார். இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும்,

பே பால் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பேஸ்புக் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன் ஒரு அறக்கட்டளையாக தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. விருதுடன் ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. .