பராமரிப்பு பணி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம்

சென்னை:

ராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர்  மின்சார ரெயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை- ராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) சில மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

இன்று (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ள விவரம்:

வேளச்சேரி-ஆவடி காலை 10.15, வேளச்சேரி-திருவள்ளூர் 12.15, மூர்மார்க்கெட்-ஆவடி 12.35, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30, ஆவடி-வேளச்சேரி 12.10, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 2.40, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர்-வேளச்சேரி 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையேயும், வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 12.55 மணி ரயில் கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடம்பத்தூர்-வேளச்சேரி 12.05, ஆவடி-வேளச்சேரி 2.40 மணி ரயில்கள் மூர்மார்க்கெட் வரை மட்டுமே செல்லும். வேளச்சேரி-திருத்தணி 11.20, வேளச்சேரி-அரக்கோணம் 1.35, வேளச்சேரி-சூலூர்பேட்டை 1.55 மணி ரயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து முறையே 12.15, 2.30, 2.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மூர்மார்க்கெட்- திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30, வேளச்சேரி-திருவள்ளூர் 9.05, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 10.50, 11.25, 1.05, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ள  ரயில் சேவை விவரம்:

கடற்கரை-ஆவடி காலை 11.10, கடற்கரை-திருவள்ளூர் 1.05, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 1.50, மூர்மார்க்கெட்-ஆவடி 12.35, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30, ஆவடி-கடற்கரை 12.10, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 2.40, திருவள்ளூர்-கடற்கரை 11.05 மணி ரயில்கள் நாளை முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர்-கடற்கரை 2.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடம்பத்தூர்-வேளச்சேரி 12.05, ஆவடி-கடற்கரை 2.40 மணி ரயில்கள் மூர்மார்க்கெட் வரை செல்லும்.

கடற்கரை-திருத்தணி 12.10, கடற்கரை-அரக்கோணம் 2.25, கடற்கரை-சூலூர்பேட்டை 2.40 மணி ரயில்கள் அதற்கு பதிலாக மூர்மார்க்கெட்டில் இருந்து முறையே 12.15, 2.30, 2.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 9.15, 9.30, 11.30, கடற்கரை-திருவள்ளூர் காலை 9.50, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 10.50, 11.25, 1.05, திருவள்ளூர்- கடற்கரை காலை 11.05 மணி ரயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில ரெயில்கள் திருவள்ளூர்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே விரைவு பாதையில் செல்வதால் இன்றும், நாளையும் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காது.

இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.