சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக ரயில்சேவை முடங்கியுள்ள நிலையில், கடந்த 7ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின் றன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

ஆனால், மும்பையில் மட்டும்,  அத்தியாவசிய பணியாளர களுக்காக புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மாநில அரசுகள் விரும்பினால், புறநகர் ரயில் சேவைகளை இயக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என்றும், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ்  கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில்சேவை துவங்கும் எனவும் அப்படி துவங்கும் பொழுது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் டிஐஜி அருள்ஜோதி  தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து உடல் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்து மாத்திரை பழங்கள் ஆகியவை கொடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்திர குமார் அவர்கள் வரவேற்றுள்ளார். அப்போது   செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பிரேம்குமார் கொரோனாவால் உயிரிழந்த ரயில்வே துறையை சேர்ந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.