Random image

வித்யாசமாக திருமண அழைப்பிதழ் அடித்து அசத்திய ’ சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ அணியின் ரசிகர்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் வித்யாசமாக திருமண அழைப்பிதழ் அடித்து அசத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி டிக்கெட் போன்று அழைப்பிதழ் அடித்து தோனியின் ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார்.

csk

இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்( ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இரு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று விளையாடி கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் சென்னையில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்த நிலையில், ஒரு சில போராட்டங்களால் போட்டி வேறு மாநிலத்தில் நடத்தப்பட்டது.

இதையடுத்து 12வது கிரிக்கெட் தொடர் எங்கு, எப்போது நடத்தலாம் என்ற குழப்பத்தில் பிசிசிஐ குழு ஈடுபட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரான வினோத் தனது திருமணத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அணியின் போட்டி டிக்கெட் போல் அழைப்பிதழ் அடித்து அசத்தியுள்ளார்.

இது குறித்து வினோத் கூறுகையில், “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட கேப்டன் தோனியின் ரசிகன் நான். அதனால் என் திருமண அழைப்பிதழ் வித்யாசமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இந்த மாதிரியை தேர்வு செய்தேன். கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் நடந்த கடைசி ஐபிஎல் போட்டிக்கு பிறகு தோனி கையெழுத்திட்ட பேட்டை அணியின் நிர்வாகத்தினர் எனக்கு பரிசளித்தனர் “ என்று கூறினார்.