‘வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம்’ சிஎஸ்கே ரசிகர்களுக்கு ‘தலைவி’ ஆறுதல்

 

ஐபிஎல் 2020 போட்டிகளின் லீக் சுற்றுடன் முதல் முறையாக வெளியேறும் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.

சிஎஸ்கே அணி வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் அணியின் தலைமை ரசிகையும் ‘தல’ தோனியின் மனைவியுமான சாக்க்ஷி சிங் தோனி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவிதை நடையில் ரசிகர்களின் மனதை தேற்றியிருக்கும் சாக்க்ஷி, வீரர்களுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறியுள்ளார்.

அனைவருமே வெற்றிபெற வேண்டும் என்ற மனநிலையுடன் விளையாடினாலும் ஒருவர் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெறக்கூடியவராக இருக்கிறார் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.