சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு!!!

--

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இருந்து மார்க் வுட், கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா உள்ளிட்ட வீரர்களை விடுவித்துள்ளது.

ipl2019

இந்தியாவில், பல நாட்டு வீரர்களும் கலந்துகொள்ளும் ஐபிஎல் டி20 தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மிக முக்கிய அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூதாட்ட புகார் காரணமாக 2016 மற்றும் 2017ம் ஆண்டு தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிட்டது.

இதையடுத்து, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த ஆண்டு சென்னை அணி களமிறங்கியது. பல தடைகள் இருந்தபோதும், அனைத்தையும் தாண்டி சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்று, தனது 3வது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி புதிய சாதனைப் படைத்தது.

இந்நிலையில் சென்னை அணி, அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்து இங்கிலாந்து வீரரான மார்க் வுட், இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்களான கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா உள்ளிட்ட 3 வீரர்களை விடுவித்துள்ளது. மேலும், அவர்களின் எதிர்காலம் நன்றாக அமைய சென்னை அணி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.