ஐஎஸ்எல் கால்பந்து – 3வது வெற்றியை பெற்ற சென்னை அணி 7வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஐதராபாத்: உள்நாட்டு கால்பந்து தொடரான ஐஎஸ்எஸ் கால்பந்து தொடரில், சென்னை அணிக்கு 3வது வெற்றி கிடைத்துள்ளது. ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோல் அடித்தது. பின்னர் 43வது நிமிடத்திலேயே மற்றொரு கோலும் விழுந்தது.

எனவே, முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் சென்னை அணிக்கு வலுவான முன்னிலை கிடைத்தது. பின்னர் இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் 3வது கோலும் கிடைத்தது.

தொடர்ந்து கோலடிக்க முயன்று பார்த்த ஐதராபாத் அணிக்கு 88வது நிமிடத்தில்தான் ஒரு கோல் கிடைத்தது. இறுதியில் 3-1 என்ற கணக்கில் வெற்றி சென்னை அணியின் வசமானது.

இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் கேரளாவைப் பின்தள்ளி 7வது இடத்தைப் பிடித்தது சென்னை அணி.