ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சோபிக்கத் தவறும் சென்னை அணி!

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் சென்னை அணிக்கு உவப்பானதாக இல்லை. கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் நேற்று 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது சென்னை அணி.

இத்தொடரில், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் ப‍ஙகேற்கின்றன. ‍சென்னையின் நேரு ஸ்டேடியத்தில், கொல்கத்தா – சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் கோலின்றி சமமாக முடிந்தது. ஆனால், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்து, தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

ஆனால், சென்னை அணியின் வீரர்களோ, கிடைத்த வாய்ப்புகளை சரியான பயன்படுத்த தெரியாமல் வீணாக்கினர். கடைசி நிமிட வாய்ப்புகளையும் கோட்டைவிட்டனர். இவர்கள் மொத்தமாக 18 முறை கோல்போட முயற்சித்தும் எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்தது. எனவே, கொல்கத்தா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.