ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது சென்னை அணி..!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கோவா அணியை வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி.

‍கோவா அணியுடன் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் இறுதிக்கு தகுதிபெற்றது சென்னை அணி.

கோவா அணியுடன் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது கோவா அணி. நேற்றையப் போட்டியிலும் 2 கோல்களை அடித்ததன் மூலமாக, மொத்தம் 6 கோல்களை அடித்து இறுதிக்கு முன்னேறியது அந்த அணி.

இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் மொத்தம் 5 கோல்களை அடித்த கோவா அணி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது. இந்தத் தொடரில் கோவா அணி மொத்தமாக 51 கோல்களை அடித்தது.

இதுவொரு புதிய சாதனை. ஏனெனில், ஐஎஸ்எல் தொடரில் இதற்குமுன்பாக எந்த அணியும் இவ்வளவு கோல்களை அடித்ததில்லை. சென்னை அணி, இதற்கு முன்பாக 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஐஎஸ்எல் கோப்பை வென்றுள்ளது. தற்போது 3வது முறையாக கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், பெங்களூரு அல்லது கொல்கத்தாவை எதிர்த்து விளையாடவுள்ளது சென்னை அணி.