சென்னை அணிக்கே வாய்ப்பு அதிகமாம் – சொல்வது பிரெட் லீ!

சிட்னி: அமீரக நாட்டில் இந்தாண்டு நடைபெறவுள்ள 13வது சீசன் ஐபிஎல் கோப்பையை, சென்னை அணி வெல்லக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என்று கணித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ.

அவர் கூறியதாவது, “சென்னை அணியில் நிறைய சீனியர் உள்ளர். இது அந்த அணிக்கான பலம். அமீரக நாட்டில் வரும் நாட்களில் வெயில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இது சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகத்தைக் கொடுக்கும். மேலும், தங்களின் சொந்த மண்ணில் விளையாடும் உணர்வை சென்னை வீரர்கள் பெறுவார்கள்.

எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சென்னை அணி கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்” என்றுள்ளார் பிரெட் லீ.

You may have missed