16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த பலே சாப்ட்வர் எஞ்சினியர் கைது

ஐதராபாத்:

16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டி, அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்த  சென்னையைச் சேர்ந்த பொறியாளர்  போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெண் ஒருவர் புகார் அளித்ததையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரை அவரது சென்னை வீட்டி லிருந்து தெலங்கானா மாநிலத்தின் மியாப்பூர்  போலீசார் கைது செய்து ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கிளெமென்ட் ராஜ் செழியன் என்று அழைக்கப்படும் பிரதீப் சென்னையைச் சேர்ந்த பொறியாளர். இவர்மீது ஐதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் கிளெமென்ட் ராஜ் செழியன் என்ற  பிரதீப்பை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், பிரதீப் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அவரை செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் அதை, ஆய்வு செய்தபோது, அதில் ஏராள மான பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து கூறிய மியாப்பூர் போலீஸார், ஐதராபாத்தைச் சேர்ந்த திருமணமான பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் விசாரணையைத் தொடங்கினோம். அந்தப் பெண் தன்னிடம் பிரதீப் என்றவர் போனில் பேசியதாகவும், வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்திவருவதாகவும் பிரபல மான நட்சத்திர ஹோட்டலுக்கு பெண் வரவேற்பாளர் தேவை என்று கூறி, வேலை நிமித்தமாக தங்களது நிறுவன எச்ஆர் மானேஜர் உங்களிடம் பேசுவார்  என்று முதலில் கூறி, அவரிடம் வேலைவாய்ப்பு குறித்து ஆசையைத் தூண்டியுள்ளர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில், மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, வரவேற்பாளர் பணி தேவையென்றால், அழகு முக்கியம் என்று கூறியவர், புகைப்படம் மற்றும் பயோடேட்டாவை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்ப கோரியுள்ளர்.

அதை நம்பிய அந்தப் பெண் போட்டோ அனுப்பி வைத்துள்ளார். அதில் அந்த பெண்ணின் அழகான போட்டோவை கண்டதும், `நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், இதனால் உங்களுக்கு வேலை நிச்சயம் என்று ஆசை வார்த்தைக் கூறி, உங்களுடைய பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படத்தில் முகம் மட்டுமே தெரிகிறது. எனவே, முழு அளவுகொண்ட புகைப்படங்களை அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளார். அதை நம்பிய அந்தப் பெண்ணும் தன்னுடைய புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் சாட்டிங் செய்து நம்பிக்கையை ஏற்படுத்திய பிரதீப், அவரின் குடும்ப பின்னணி குறித்து அறிந்த நிலையில், அவரது நிர்வாண புகைப்படங்களை  கேட்டுள்ளார். முதலில் தயக்கம் காட்டிய அந்தப் பெண், பின்னர் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு, தனது சுயரூபத்தைக் காட்டிய பிரதீப்,  வீடியோ காலில் அந்த பெண்ணிடம் பேசி,  நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.

பிரதீப்பின் தொல்லை அதிகரிக்கவே, அந்தப் பெண் ஐதராபாத் போலீஸில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, இதுகுறித்துசைபர்கிரைம் காவல்துறை மூலம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது,  பிரதீப் என்ற கிளெமென்ட் ராஜ் செழியன் என்பதும், சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும் அறிந்து கொண்டதாகவும், மேலும், பிரதீப் ஒரு பொறியாளர் என்பதும், சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது.

அதையடுத்து, அவரை சென்னை போலீசார் உதவியுடன் ஐதராபாத் போலீசார் சென்னை வந்து கைது செய்ததாகவும், அவரது போனை கைப்பற்றியபோது, அதில் ஏராளமான பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது என்றும் கூறி உள்ளனர்.

பிரதீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐதராபாத் பெண்ணைப் போல 16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களைப் பெற்றிருக்கிறார்.  போலியான போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இணையதளத்தில் தொடங்கி, அதற்கு வரவேற்பாளர் உட்பட சில பணியிடங்களுக்கு ஆள் தேவை என்று இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து, அதன்மூலம் வேலைக்கு அப்ளை செய்யும் இளம்பெண்களை தொடர்பு கொண்டு அவரிகளின்  நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து,  பின்னர் அவர்களை பணம் பறித்த வந்துள்ளார்.

பிரதீப்பின் இந்த செயல் அவரது மனைவி உள்பட அவரது குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை என்று கூறிய காவல்துறையினர், பிரதீப் பெரும்பாலும் வட மாநிலப் பெண்களையே குறிவைத்துஇதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரிவித்து உள்ளனர்.

அவரிடம் மேலும் விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.