சென்னை

ரலாற்றில் முதல் முறையாகச் சென்னை வெப்ப நிலை 20 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளது.

தென் இந்திய மாநிலங்களில் தற்போது குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது.   மற்ற வருடங்களை விட தற்போது வெப்ப நிலை குறைவாகப் பதிவாகி வருகிறது.   நாளுக்கு நாள் குறைந்து வரும் இந்த வெப்ப நிலையால் வழக்கத்தை விட மிகவும் குளிர் அதிகரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் பதிவானபடி இந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக வெப்பநிலை 20 டிகிரிக்கும் கீழாகப் பதிவாகி உள்ளது.   இன்றைக்கு அதிகாலை 2.30 மணிக்கு 19.2 டிகிரி பதிவாகி உள்ளது.   அது விடிகாலை 5.30 மணிக்கு 19.0 டிகிரியாக குறைந்துள்ளது.

இதே நிலை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்றும் வெப்ப நிலை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.   அநேகமாக நாளை பொங்கல் அதிகாலை இந்த வருடத்தின் மிகக் குளிர்ந்த நாளாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Thanks : Chennai Rains