சென்னை திருமுல்லைவாயில் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் சித்ரவதை

சென்னை

சென்னை நகரின் புறநகர் பகுதியான திருமுல்லைவாயிலில் ஒரு காப்பகத்தில் உல்ள சிறுமியருக்கு பாலியல் சித்ரவதை நடைபெற்றதாக தகவல்கள் வந்ததால் நாக்வர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அம்பத்தூருக்கும் ஆவடிக்கும் இடையில் அமைந்துள்ளது திருமுல்லைவாயில்.   இங்குள்ள சரஸ்வதி நகரில் நித்யவாசல் என்னும் காப்பகம் உள்ளது.   இதில் தங்கி உள்ள குழந்தைகள் அருகில் உள்ள ஒருஅரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.  அம்பத்தூர் நீதிபதி அனிதா இந்த பள்ளியில் நடந்த ஒரு சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்துக் கொண்டார்.

அந்த முகாமில் நித்யவாசல் காப்பகத்தில் உள்ள மாணவிகள் தங்களுக்கு காப்பகத்தில் உள்ளவர்கள் பாலியல் தொந்தரவு செய்வதாக தெரிவித்தனர்.   மாவட்ட காப்பக அலுவலர் செந்தில் காவல்துறையினருடன் நித்யவாசல் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.   அந்த சோதனையில் விடுதி காப்பாளர் பாஸ்கர், முத்து, சாமுவேல் உள்ளிட்டோர் அங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் தினமும் தொந்தரவு செய்ததுதெரிய வந்துள்ளது.

இதனால் காப்பக உரிமையாளர் விமலா ஜேக்கப், நிர்மலா, முத்து, பாஸ்கர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.,   காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டுளது.  அங்கு தங்கி இருந்த 23 மாணவிகளும் 20 மாணவர்களும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உள்ளது.