சென்னையிலிருந்து சிரபுஞ்சி காட்டுக்கு தனியாக ஜீப்பில் சென்ற பிரபல நடிகை..

லகிலேயே அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி காடுகளில் படமாகிறது ஆன்ட்ரியா நடிக்கும் ’நோ என்ட்ரி திரைப்படம். அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதியான கா என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்தது. மூர்க்கமான நாய் களுடன் போராடும் பரபரப்பான காட்சி களில் ஆன்ட்ரியா நடித்தார்.
இதுபற்றி பட இயக்குனர் அழகு கார்த்திக் கூறியது , “மேகாலயாவில் உள்ள சிரபுஞ்ஜி காட்டுப் பகுதியில் நோ எண்ட்ரி பட படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் நடந்தது. சென்னையைச் சேர்ந்த சமையல்காரர்கள் உட்பட 110 பேர் கொண்ட குழுவாக படப்பிடிப்புக்கு சென்றோம். இதில் நடிகை ஆன்ட்ரியா சென்னையில் இருந்து ஒரு ஜீப்பில் ஒரு சாலைப் வழியாக தனியாக பயணம் மேற்கொண்டு சிரபுஞ்சி வந்தடைந்தார்.


நோ என்ட்ரி படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இதில் நடிப்பதற்காக அவர் வில்வித்தை பயிற்சி பெற்றார்.
படத்தில் பயிற்சி பெற்ற ஜெர்மன் ஷெப்பர்ட், அகிதா மற்றும் டோபர்மேன் என 15 நாய்களுக்கு நடித்திருக்கின்றன. நாய்களை ஹூட்டிங்கில் பயன்படுத்த அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றோம்
இவ்வாறு இயக்குனர் கூறினார்,