வரும் சனி, ஞாயிறு நாட்களில் சென்னை தாம்பரம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை:

ரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில்  (செப்டம்பர் 1, 2) சென்னை முதல் தாம்பரம் வரையிலான  ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தை அகலப்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மின்சார சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தை அகலப்படுத்த என்ஜினீயரிங் தொடர்பான பணிகள் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு 11.30 மணி முதல் மறுநாள் (செப்:2) காலை 5.30 மணி வரை 6 மணி நேரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 செப்டம்பர் 1-ம் தேதி (சனிக்கிழமை)  தாம்பரத்தில் இருந்து இரவு 11.30 மணி , செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 4, 4.20, 4.40, 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 செப்டம்பர் 1-ம் தேதி (சனிக்கிழமை)  சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.05, 11.30, 11.59 மணி, மறுநாள் (செப்:2) காலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல  செங்கல்பட்டில் இருந்து இரவு 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 

செப்டம்பர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55, 4.40, 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை ரயில் பாதையில் சீரமைப்பு பணி: ரயில் சேவைமாற்றம்

செங்கோட்டை அருகே ரயில் பாதைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

அதன்படி, கொல்லம் – செங்கோட்டை (56336), செங்கோட்டை – கொல்லம் (56335) முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களின் சேவை இன்று (ஆக:30) ரத்து செய்யப்படுகிறது. 

இதேபோல், கொல்லம் – தாம்பரம் (06028) இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் இன்று செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.