கலகத்தை தூண்டியதாக வேல்முருகன் மீது சென்னை காவல்துறையினர் புதிய வழக்கு!

சென்னை:

மிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது தமிழக காவல்துறையினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி சென்னை  சேப்பாக்கத்தில் ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, கலகத்தை தூண்டும் வகையில் பேசியதாக வேல்முருகன் மீது திருவல்லிக்கேணி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கு மற்றும், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்குகளில்  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் தற்போது வெளியே உள்ளார். அவர்மீது மேலும் பல வழக்குகளை பாய்ச்சி அவரை முடக்க தமிழக அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக பழைய வழக்குகளை தூசித்தட்டி எடுத்து ஆராய்ந்து வருகிறது.

இதற்கிடையில்,  ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுவிக்கலாம் என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வேல்முருகன் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சு கலகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி, ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது அவர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசுக்கு எதிராக குற்றத்தை செய்ய தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed