சென்னை: நினைவேந்தல் பேரணி சென்ற வைகோ உள்ளிட்டோர் கைது

சென்னை:

இலங்கை இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடதத்ப்படும் என்று 13 இயக்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.

அவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால், தடையை மீறி மெரினா செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.