தொடங்கியது சென்னை vs மும்பை போட்டி – முதலில் பேட்டிங் ஆடும் சென்னை!

புதுடெல்லி: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை – மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டி, இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பெளலிங் தேர்வுசெய்ததை அடுத்து, தற்போது களமிறங்கியுள்ளது சென்னை அணி. ஆனால், துவக்கத்திலேயே ருதுராஜ் விக்கெட்டை இழந்துவிட்டது.

ஐபிஎல் தொடரிலேயே, அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதாக கூறப்படுபவைதான் சென்னை & மும்பை அணிகள். எனவே, இந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்கு, எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதுவரை, இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில், மும்பை அணிதான் அதிகமுறை வென்றுள்ளது.

அதேசமயம், இந்தமுறை மும்பை அணி, தொடரில் சொதப்பி வருகிறது. அதேசமயம், சென்னை அணி சிறப்பாக ஆடிவருகிறது.

முதல் சுற்று லீக் போட்டிகளில், இரு அணிகளுக்கும் இது கடைசி ஆட்டம் என்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.