குறுகலான பகுதிகளில் குட்டியானை மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு! சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை:

மிழக தலைநகர் சென்னையில் கடுமையான குடிதண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில்,  தமிழக அரசு லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கி வருகிறது. இதற்காக சென்னையில் மட்டும் 4500 தனியார் ஒப்பந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த லாரிகள் நகரின் உட்புற சாலைகளில் செல்ல முடியாததால், குறுகலான  பகுதி களில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில்கொண்டு, குறுகலான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தண்ணீர் வழங்க   சென்னை குடிநீர் வாரியம் குட்டியானை என்று அழைக்கப்படும் டாட்‌டா‌ ‌ஏஸ் போன்ற சிறிய ரக வாகனங்கள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தண்ணீர் கொண்டு செல்லப்படாத பகுதிகளுக்கும் தற்போது தடையின்றி நீர் செல்லப்படுவதாக குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மேலும்3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்கள் குட்டியானையில் பொருத்தப்பட்டு,  நீரேற்றும் நிலையத்தில் இருந்து தண்ணீர் நிரப்பி, நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்து 704 சுற்றுகள் முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 500 சுற்றுகள் தண்ணீர் விநியோகம் அதிகரித்துள்ளதாக வும் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும்,  குடிநீர் விநியோகம் தொடர்பாக மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக கூடுதலாக 20 தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்‌பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.