சென்னைக்கு 3வது வெற்றி – ஐதராபாத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

துபாய்: தனது 8வது போட்டியில், ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது சென்னை அணி.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.

பின்னர், எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கியது ஐதராபாத் அணி. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 39 பந்துகளில் 57 ரன்கள் அடித்தாலும், பிறரிடமிருந்து சரியான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.

கேப்டன் டேவிட் வார்னர் 13 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டானார். அந்த அணி இன்று அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 2 மட்டுமே. அதேசமயம் சென்னை அணி 9 சிக்ஸர்களை அடித்திருந்தது.

ஐதராபாத் அணியின் ரஷித் கான், ஷர்துல் தாகுரின் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.

சென்னை அணி சார்பில் கார்ன் ஷர்மா மற்றும் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். துபக் சஹார் 4 ஓவர்களை வீசி, விக்கெட் எதுவும் எடுக்காமல் 28 ரன்களை மட்டுமே கொடுத்தார்.