திருப்பதி கோயில் தொலைக்காட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சென்னை பக்தை..

திருப்பதி கோயில் தொலைக்காட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சென்னை பக்தை..
ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயில் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், குறைந்த அளவிலான எண்ணிக்கையில் ஏழுமலையானைத் தரிசிக்கப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் நேற்று திருமலை சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்.
பின்னர் திருமலை- திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டியிடம் ஒரு கோடி ரூபாய்க்கான ‘டிமாண்ட் டிராப்டை’’ அந்த பக்தை நன்கொடையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தொடர்பான  நிகழ்ச்சிகளை ’ ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல்’ என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.
அந்த தொலைக்காட்சியின்  மேம்பாட்டுக்கு இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு, சென்னை பெண் பக்தர் தெரிவித்ததாகக் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறினார்.
அந்த பக்தை யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
-பா.பாரதி

You may have missed