அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை அமைக்கும் பணி தீவிரம்

--

சென்னை:

சென்னையில் உள்ள அதிமுக  தலைமை  அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இதன் அருகே மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 

இதற்காக எம்ஜிஆர் சிலை அருகில் பள்ளம் தோண்டு பணி நடந்து வருகிறது. இதனால் எம்ஜிஆர் சிலை துணியால் சுற்றி மறைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் தகர ஷீட்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பணி வெளியில் தெரியாத வகையில் மறைக்கப்பட்டுள்ளது.

மெரீனாவில் உள்ள எம்ஜிஆர் நினைவு இடத்தில் ஜெயலலிதாவின் உடலும் புதைக்கப்பட்டுள்ளது. இங்கு நினைவிடம் அமைக்க விரைவில் டெண்டர் நடைபெறவுள்ளது. வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று நினைவிட கட்டுமான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நாள் அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை திறக்க அதிமுக.வினர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.