கொரோனா ; சென்னை மண்டல வாரியாக பாதிப்பு

சென்னை

சென்னை நகரில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் இதோ

தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளது.

இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39641 ஆகும்.

இதில் 559 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் 21,796 பேர் குணம் அடைந்து 17,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

பாதிக்கப்பட்டோரில் 17% பேர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்

அடுத்தபடியாக ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 13% பாதிக்கப்பட்டோர் உள்ளனர்.

அண்ணாநகர், அடையாறு, ஆதம்பாக்கம், பகுதிகளில் தலா 10% பாதிக்கப்பட்டோர் உள்ளனர்.

அடுத்ததாக திரு வி க நகரில் 9%,  திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், பகுதிகளில் தலா 3% உள்ளனர்.

பெருங்குடி, சோழிங்கநல்லூர், பகுதிகளில் தலா 2% மட்டும் மணலி, வளசரவாக்கம் பகுதிகளில் தலா 1% உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி