Random image

சென்னை : குடிபோதையில் பாட்டியக் கொன்ற பேரன் கைது

சென்னை

ண்ணாரப்பேட்டையில் குடி போதையில் தனது பாட்டியை அடித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்,

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வ உ சி நகர் புதுக் குடியிருப்பு அமைந்துள்ளது.   இங்கு  சின்னப்பொண்ணு என்னும் 95 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.    இவருடைய மகனான 50 வயதான மகாலிங்கம் மற்றும் மகாலிங்கத்தின் மகனான 19 வயதான நவீன் குமார் ஆகியோரும் இதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

நவீன்குமாருக்கு இந்த இளம் வயதிலேயே குடிப்பழக்கம் மிகவும் உள்ளது.  இதற்காக இவருடைய பாட்டி இவரை அடிக்கடி திட்டுவ்து வழக்கம்.   கடந்த 6 ஆம் தேதி அன்று நவீன்குமார் வழக்கம் போல் குடித்துவிட்டு போதையில் வந்துள்ளார்.  அதை ஒட்டி பாட்டி சின்னப்பொண்ணு அவரை திட்டி உள்ளார்.

ஆத்திரம் அடைந்த நவீன்குமார் குடிபோதையில் பாட்டியை அடித்து கீழே தள்ளி உள்ளார்.   படுகாயம் அடைந்த சின்னப்பொண்ணு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.  அதை ஒட்டி புது வண்ணாரப்பேட்டை காவல்நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்துள்ளனர்.