ஐபிஎல் 2019 : சேப்பாக்கம் மைதானத்தை குறை கூறும் தோனியும் கோலியும்

சென்னை

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் கிரிக்கெட் ஆடுகளம் சரி இல்லை என தோனி மற்றும் விராட் கோலி கூறி உள்ளனர்.

நேற்று சென்னையில் தொடங்கிய ஐபிஎல் 2019 பந்தயத்தில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் போட்டியை வென்றது.

இந்த போட்டிகளில் இரு அணிகளுமே மிகக் குறைந்த அளவில் ரன்கள் எடுத்துள்ளன. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. அத்துடன் விக்கட்டுகளை வீழ்த்துவதிலும் இரு அணிகளும் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் மைதானத்தின் கிரிக்கெட் ஆடுகளம் சரிவர இல்ல்லாததே ஆகும் என பல கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்/

இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவருமான தோனி, “நமது அணியில் பல திறமையான ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களை பொறுத்தவரையில் 80, 90, 100 ரன்கள் என்பதே குறைவான ரன்கள் ஆகும். அத்துடன் ஸ்பின்னர்களும் விக்கெட் எடுக்க மிகவும் சிரமப் பட்டனர்ர். இவைகளுக்கு காரணம் ஆடுகளம் சரியாக அமையாததாகும்.” என தெரிவித்தார்.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி தலைவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவருமான விராட் கோலி, “இதை போன்ற ஒரு மோசமான தொடக்கத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இது போட்டியின் தொடக்கத்தில் நடந்தது ஓரளவு நல்லதாகும். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அதே நேரத்தில் பந்து வீசுவதும் எளிதாக அமையவில்லை. இதனால் இரு அணிகளுமே சரியாக விளையாட முடியவில்லை. மைதானம் சரியாக பராமரிக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்கு விளையாடி 110-120 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.