எனக்கு ஊரெல்லாம் கெட்டப் பெயர் வாங்கி தந்தவர் சேரன் : பார்த்திபன்

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் இயக்குநர் சேரன் பற்றி பலருக்கு பலவிதமான கருத்துக்கள் உள்ளன . இந்நிலையில் சேரன் இயக்கத்தில் நடித்த பார்த்திபன் அவர் பற்றி பேட்டி ஒன்றில் அவரைப்பற்றி பேசியுள்ளார்.

சேரன் ஒரு கடின உழைப்பாளி.இருப்பினும் மற்றவர்களை காயப்படுத்த அவர் கவலையே பட மாட்டார் என கூறியுள்ளார் .

நான் வடிவேலுவுடன் சேர்ந்து வேறு படத்தில் நடிக்க எழுதி வைத்திருந்த காமெடி காட்சிகளை அதாவது குண்டக்க மண்டக்க காட்சிகளை ஏற்க மறுத்தார் நான் உங்களை போல் பிரபலமான இயக்குநர் இல்லை , இப்பொழுது தான் வந்துள்ளேன். உங்கள் ஐடியா ஒர்க்அவுட் ஆனால் எனக்கு அது உதவாமல் போய்விடும் என்பதால் மறுக்கிறேன் என்றார்.

அதை தவிர எனக்கு ஊரெல்லாம் கெட்டப் பெயர் வாங்கிக் கொடுத்தார்..அவரிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. குப்பையான ஏதோ படத்தை பார்த்துவிட்டு மேடையில் அவர் விமர்சனம் செய்யும்போது என்னங்க இது பார்த்திபன் படம் போன்று செய்துள்ளீர்கள் என்று சொல்வார் .

கார்ட்டூன் கேலரி