மீண்டும் புது பொலிவுடன் திருமணம் திரைப்படம் மறு வெளியீடு…!

--

 

சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் திருமணம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மார்ச் மாத துவக்கத்தில் இப்படம் வெளியானது. நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை கொண்ட இப்படம் பல இடங்களில் திரையிட முடியவில்லை

பெரும்பாலான தியேட்டர்களில் 90 எம்எல் படமே திரையிடப்பட்டது. திருமணம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்த இந்நிலையில், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.