வீட்டுச்சிறைக்குள்’ ’செஸ்’ ஆனந்த்…

வீட்டுச்சிறைக்குள்’ ’செஸ்’ ஆனந்த்…

நம்ம ஊர் உலக ‘செஸ்’ சாம்பியன் ஆனந்த், சில போட்டிகளில் பங்கேற்க  ஜெர்மனிக்குச் சென்றிருந்தார்.

கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், 100 நாட்களுக்கும் மேலாக ஜெர்மனியில் ஆனந்த் தங்க நேரிட்டது.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஜெர்மனியில் இருந்து  பெங்களூரு திரும்பிய ஆனந்த், அங்கு 7 நாட்கள் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டிருந்து விட்டு, நேற்று சென்னை திரும்பினார்.

வீட்டிலும், 7 நாள் தனிமை கட்டாயம் என்பதால், சென்னையில் உள்ள தனது வீட்டின் தனி அறையில் ஆனந்த் தனிமையில் இருக்கிறார்.

அவர் நேற்று வீட்டுக்கு வந்த போது, மனைவி அருணா உள்ளிட்ட குடும்பத்தார், சமூக இடைவெளியைக் கடைப் பிடித்து தொலையில் இருந்து  கை அசைத்துள்ளனர்.

காரில் இருந்து இறங்கிய ஆனந்த், குடும்பத்தாருக்கு கை காட்டி விட்டு, விறுவிறுவென தனது அறைக்குச் சென்று நாளிட்டுக்கொண்டார்.

ஆனந்த் தங்கியுள்ள அறையின் பக்கத்தில் வராந்தா உள்ளது. அவருக்கான உணவு அந்த வராந்தாவில் தான் வைக்கப்படும். அதைத் தனது அறையில்  இருந்தபடி எடுத்துச் சாப்பிட வேண்டும்,

இன்னும் ஒரு வாரம் கழித்தே ஆனந்தை, குடும்பத்தார் முகம் பார்த்துப் பேச முடியும்.