ஹாங்சூ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், செஸ் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதை, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல செஸ் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

வரும் 2022ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், செஸ் விளையாட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இது, செஸ் பிரியர்களுக்கு உத்வேகம் தரக்கூடியதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து 5 முறை செஸ் உலகச் சாம்பியனும், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளதாவது, “இந்த நடவடிக்கையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் நம் நாடு பதக்கம் வெல்லும் என நம்புகிறேன். எனவே, இந்தப் புதிய மாற்றம் வரவேற்கத்தக்கது” என்றார்.

கடந்த 2006ம் ஆண்டு டோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், செஸ் விளையாட்டு இடம்பெற்றிருந்தது.

அப்போட்டியில், இந்தியா சார்பில் 2 தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்டன. 2010ம் ஆண்டும் இந்தியாவிற்கு செஸ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

– மதுரை மாயாண்டி