ஹாலிவுட் தமிழர்  அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

ல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜூக்கு  பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது  அளிக்கப்பட்டது.

மும்பையில் நடந்த இதற்கான விழாவில்,  ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சர்   ஜீன்-யவீஸ் லீ துரியன்,  செவாலியர் விருதை  வழங்கி கவுரவித்தார்.

பிரான்ஸ் அரசின் மதிப்புமிக்க விருதான செவாலியர்  விருது, கலை, கலாச்சார மற்றும் இலக்கிய துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, அவர்களது இந்த துறைகளில் அவர்களது பங்களிப்பை பாராட்டி அளிக்கப்படும் விருதாகும். .

இதுகுறித்து பேசிய பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் “அலெக்ஸ்சாண்டர் ஜிகிளர், இந்த விருதை அசோக் அமிர்தராஜுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன். சினிமா துறையில் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை வலுப்பெற செய்துள்ள  அசோக் அமிர்தராஜ்  இந்த விருது பெற தகுதியானவர்” என்று பாராட்டினார்.