ராய்ப்பூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சத்தீஸ்கர் முதல்வர்பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுக்க போராடி வருகிறது. இந்த போரில் வெற்றி பெற சத்தீஸ்கரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் மொத்தம் ஒன்பது பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதுடன், அதில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளன.

சத்தீஸ்கர் முதல் முதல் கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், இதற்கு பழங்குடியினரும் ஆதரவளித்து வருவதாகவும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பாகேல், “மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகள் அதிக எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றன. வரலாற்றில் முதல்முறையாக, பஸ்தாரில் உள்ள ‘முர்கா லடாய்’ மூடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்குச் சென்ற பழங்குடியினருக்காக, பஸ்தார் மக்கள் கிராமத்திற்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை உருவாக்குகின்றனர். எனவே அவர்கள் தங்குவதற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நிஜாமுதீன் மார்க்காஸ் நிகழ்வு கொரோனா வைரஸ் தடுப்புகான சவாலை அதிகரித்துள்ளது, இருப்பினும், இந்த நேரத்தில், அவர் எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இவை அனைத்திற்கும் யார் பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சத்தீஸ்கரில் இருந்தும் பலர் டெல்லியில் தப்லீஹி ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களில் 103 பேரில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும், 69 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.

ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளதுடன், மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிட்டோம். ஹோலி கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தோம். இது மட்டுமல்லாமல், அமைச்சரவைக் கூட்டமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்யப்பட்டது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 மக்களுக்கு ரேஷன், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்காக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், மொத்த மற்றும் நெரிசலான சந்தைகள் மூடப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன, இதனால் சமூக தூரத்தை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

வயல்வெளிகளிலும் வேலிகளிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தானியங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்வதற்கான பயனுள்ள ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பாகேல் மேலும் கூறினார்.