மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படுத்த நோபல் பரிசு பெற்ற அபிஜித்தை சந்தித்த சத்திஸ்கர் முதல்வர் …

த்திஸ்கர் மாநிலத்தை  வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் நோக்கில்,நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜியின் ஆதரவை மாநில முதல்வர்  பூபேஷ் பாகல் நாடியுள்ளார்.  மகாத்மா காந்தி பரிந்துரைத்தபடி மாநிலத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை செயல்படுத்துவதில்  சத்தீஸ்கர் அரசு வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

பொருளாதாரத்திற்காக  நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி சமீபத்தில்  இந்திய பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, தற்போது கிடைத்துள்ள பொருளாதார தரவுகளின் படி, இந்திய பொருளாதாரம் மீண்டும் சீராக வெகு காலம் பிடிக்கும் என்றும்,  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்ததாகவும், தற்போது மிக மோசமாக மாறியுள்ளதாகவும் மோடி அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சத்திஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சமீபத்தில் ஒருவார கால அரசுமுறை பயணமாக சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன் மற்றும் நியூயார்க்கிற்கு விஜயம் செய்தார். மேலும்  ஐ.நா. மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி பல்கலைக்கழகங்களில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்.

மேலும் மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அங்குவாழும் இந்தியர்களையும் முதலீட்டாளர்களையும் சந்தித்து, தங்களது மாநிலத்துக்கு தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, முதல்வருடன் வந்த அதிகாரிகள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த என்.ஆர்.ஐ.க்களும் அமெரிக்கர்களும் மாநிலத்தில் முதலீடு செய்வதில் கணிசமான அக்கறை கொள்ள வலியுறுத்தியதாகவும்,  குறிப்பாக உணவு பதப்படுத்துதல், விவசாய தொழில்நுட்பம் மற்றும் கனிமத் துறை  போன்றவற்றில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

சத்திஸ்கர் மாநில  அரசாங்கத்தின் கவனம் விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் உதவுவதாகும். கிராமவாசிகள் வளமானவர்களாக மாறினால், அதன் செழிப்பு நகர்ப்புற மையங்களுக்கும் பாயும் என்று கூறியவர்,  மாநிலத்தில் நல்லிணக்கம் இருந்தது, சாதி மோதல் இல்லை என்றும்,  சத்தீஸ்கர் இப்போது அரசியல் ரீதியாக நிலையானது, அமைதியானது மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது பூபேஷ்பாகல், நோபல் பரிசு பெற்றவரும், பொருளாதார வல்லுனருமான அபிஜித் பானர்ஜியை கேம்பிரிட்ஜில் உள்ள எம்ஐடியில் சந்தித்து பேசினார். அப்போது, அபிஜித்  சத்தீஸ்கரை பார்வையிட அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பேராசிரியர் பானர்ஜியின் குழு இந்த ஆண்டின் பிற்பகுதியில் சத்தீஸ்கருக்குச் சென்று மாநில அரசின் பல்வேறு முயற்சிகளை மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி