விதவை மருமகள் மேல் பாசம்… திருமணத்தில் முடிந்த விநோதம்…

த்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் 21 வயதான ஆர்த்தி சிங். இவரது கணவர் கவுதம் சிங் இரண்டு வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக இறந்தது விட்டார். இதனால் ஆர்த்தி இளம்வயதிலேயே விதவையாகி தனிமையில் வாழ்ந்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்துள்ளார்.

அப்போதெல்லாம் அவரது மாமனார் தான் உடனிருந்து அவரை அன்புடனும் கனிவுடனும் கவனித்து வந்துள்ளார். இது அவரது மாமனார் மீது ஒரு பற்றினை உண்டாக்கியுள்ளது. எனவே அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார் ஆர்த்தி.

இதனை அறிந்த ராஜ்பூத் க்ஷத்ரிய மகா சபாவினர் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் இவரின் மறுமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இந்த திருமணத்தை நடத்துவதென்று முடிவு செய்தனர். அதன்படி ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னிலையில் அந்த இளம்பெண்ணை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மாமனாரே தனது மருமகளுக்கு வாழ்வளித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

– லெட்சுமி பிரியா