ராய்பூர்:

சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு வனப் பகுதியில் உள்ள உரிமையை அரசு ரத்து செய்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டம் காத்பாரா கிராமத்தில் உள்ள பிரசா கிழக்கு மற்றும் கீடே பேசன் நிலக்கரி பகுதியில் ராஜஸ்தான் வித்யூத் உத்பதன் நிகாம் நிறுவனம் மற்றும் அதானி மினரஸ் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜஸ்தான் அரசு நிறுவனத்துக்கும், அதானி தனியார் நிறுவனத்துக்கும் நூறு சதவீத மானியத்துடன் இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி அந்த கிராமத்தை சேர்ந்த பழங்குடி இன மக்களுக்கு பாரம்பரிய வனப்பகுதியில் உள்ள உரிமையை மாநில அரசு ரத்து செய்து உத்தரவிட்டள்ளது. வன உரிமை சட்டத்தின் படி வழங்கப்பட்ட இந்த உரிமையை நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏதுவாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

நாட்டில் இது போன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். இது குறித்து பதிலளிக்க சட்டீஸ்கர் அரசு அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.