சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு…!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் டி.எஸ். சிங் தியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை.

ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாள்களுக்கு சுய தனிமைப்படுத்துதலில் இருக்கப்போகிறேன். கடந்த சில நாள்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.