சண்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிக்கன் கடை உரிமையாளர் ‘பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிட்டால்’ தன் கடையில் விற்பனை செய்யும் சிக்கன் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Pak

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பை சேர்ந்தவன். இதனால் பாகிஸ்தானிற்கு எதிராக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு பாகிஸ்தானிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரியை உயர்த்தியது. அதுமட்டுமின்றி, மிகவும் வேண்டத்தக்க நாடு என்ற அந்தஸ்தையும் பாகிஸ்னிடம் இருந்து இந்திய அரசு பெற்றுக் கொண்டது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சண்டீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் பகுதியில் சிக்கன் கடை உரிமையாளர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளருக்கு வித்யாசமான தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது தனது கடையில் விற்பனைக்கு பெயர் போன சிக்கன் லெக் பீஸ்க்கு 10 ரூபாய் தள்ளுபடி என அறிவித்துள்ளார். இதற்கு அவர் விதித்துள்ள நிபந்தை தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளது. தள்ளுபடி விலையில் சிக்கன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ‘ பாகிஸ்தான் ஒழிக’ என முழக்கமிட்டால் ஒரு லக்பீஸ்க்கு 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த தள்ளுபடி சிக்கன் அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது.