ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் காவலர் பணிக்கு 13 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது பாராட்டுகளை பெற்று உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் 2019-20ம் ஆண்டுக்கான காவலர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தேர்வு முடிவுகளில் கான்ஸ்டபிள் பணிக்கு 13 திருநங்கைகள் தேர்வாகி உள்ளனர். அவர்கள் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய மாநில காவல்துறை இயக்குனர் டி.எம்.அவஸ்தி,  காவலர்களாக தேர்வாகி உள்ள திருநங்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன் என்றார். காவலராக தேர்வானது குறித்து திருநங்கை கிருஷ்ண தண்டி கூறியிருப்பதாவது:

நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை என்றார். தற்போது தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே திருநங்கைகள் காவலர் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.