சத்தீஸ்கர்: ரூ.2.5 லட்சம் செலவு செய்தும் யோகா செய்ய ஆளில்லை

ராய்பூர்:

உலக யோகா தினம் கடந்த 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் மாநகராட்சி சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெயந்தி ஸ்டேடியத்தில் போலோ மைதானம் இதற்காக தயார் செய்யப்பட்டது. மண்டல அதிகாரி உத்தரவின் பேரில் யோகா செய்வதற்கு ஏதுவாக தரை விரிப்பு உள்ளிட்டவை புதிதாக வாங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ரூ. 2.5 லட்சம் செலவு செய்யப்பட்டது. ஆனால் யோகா தினத்தன்று அப்பகுதி மக்கள் ஒருவர் கூட அங்கு யோகா செய்ய வரவில்லை. இதனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ‘‘மக்கள் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது தெரியவில்லை’’ என்று மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் சாகு தெரிவித்தார்.