3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை அதிரடி

சுக்மா:

த்தீஸ்கர் மாநிலத்தில், காவல்துறையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையில், 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சந்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள  முலேர் என்ற பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த கிராமத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

ஆப்ரேஷன் நக்சல் தடுப்பு என்ற பெயரில்  களம் இறங்கிய அந்த பகுதி காவல்துறையினர்,  மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினார். அபபோது, அங்கு பதுங்கி இருந்த நக்சல்கள், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில், காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதன் காரணமாக மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. முடிவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை கைப்பற்றினர். மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.