கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்

கணவர் மரணத்தை அறிவித்த தொகுப்பாளினி: சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் துயரம்


சத்தீஸ்கர் தொலைக்காட்சியில் ஒரு செய்தித் தொகுப்பாளினி நேரடி ஒளிபரப்பில், கார் விபத்தில் தன் கணவர் இறந்த செய்தியை அதிரடிச் செய்தியாய் அறிவித்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சட்டீஸ்கர் மக்களால், மிகவும்அதிகமாய் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றான ஐபிசி-24ல், ஒரு நிருபர் களத்திலிருந்து தொலைபேசியில் பிதாரா அருகே ஒரு ரெனால்ட் டஸ்ட்டர் கார் ஒன்று அபாயகரமான விபத்தில் சிக்கியதை பகிர்ந்துக் கொண்ட  போது அந்தச் செய்தி ஒளிபரப்பை நேரலையில் தொகுத்துவழங்கிய சுப்ரீத் கவுர் நிதானமிழக்காமல், தன் கடமையை முடித்து விட்டு. அதன் பின்னரே, தன் கணவரைக் காண ஓடினார்.

சத்தீஸ்கர் தனியார் ஐபிசி-24 சேனலில், சனிக்கிழமை காலை நேரடி செய்தி ஒளிபரப்பில்,  ஒரு செய்தி தொகுப்பாளினி, கவுர்,  ஒரு கள நிருபர் மகாசமுந்த் மாவட்டத்தில் பிதரா( Pithara)வில் நடந்த ஒரு ரெனால்ட் டஸ்ட்டர் சம்பந்தப்பட்ட ஒரு அபாயகரமான விபத்து விவரங்களை தொலைபேசியில் கூறியதை அமைதியுடன் தொகுத்து வழங்கினார். அப்போது நிருபர் “அந்த  வாகனத்தில் பயணம் செய்த  ஐந்து பேரில் மூன்று பேர் இறந்து விட்டனர் என்று கூறினார். ”

கவுர் உடனடியாக, கணவர் இறந்ததை அடையாளம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அந்த வாகனம் தன் கணவர் செல்லும் வாகனமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்துக் கொள்வது எளிது. ஏனெனில், கவுரின் கணவரும் அவரது நான்கு தோழர்களும் இணைந்து அதே நேரத்தில் அதே வழியில் ஒரு ரெனால்ட் டஸ்ட்டர் பயணிக்கின்றனர் என்பது அவர் அறிந்ததே.
எனினும், அவர் தன் கடமை முடிக்கும் வரை நிலைக்குலையாமல் இருந்துவிட்டு டிவி ஸ்டூடியோவை விட்டு வெளியேறிய பின்னரே கதறி அழுதார். அதன் பின்னரே, தன் உறவினருக்கு அலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
“கவுர் ஒரு மிகத் துணிச்சலான பெண். ஒரு தொகுப்பாளினியாக அவரை நினைத்து எப்பொழுதும் பெருமை கொள்வோம். ஆனால் இன்று நடந்தது எங்களை அதிர்ச்சியில் உறையச் செய்துவிட்டது ” என ஒரு சக ஒரு தொகுப்பாளினி கூறினார்.
கவுர், 28, ஒரு செய்தி தொகுப்பாளினி. சட்டீஸ்கர் மக்களால், மிகவும்அதிகமாய் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றான ஐபிசி-24ல் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றார். கவுர் “ பிலாய்”பகுதியச் சேர்ந்தவர், அவர் ஒரு வருடம் முன்பு ஹர்ஷத் கவாடே (Harsad Kawade) திருமணம் செய்து கொண்டார் . இளம் தம்பதி ராய்பூர் குடியிருந்து வந்தனர்.

கவுர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விட்டாலும், அவரது தைரியம் குறித்த உரையாடல்கள் தொலைக்காட்சி சானலில் அலுவலகத்தை ஆக்கிரமித்தது.
“அவள் அது தனது கணவரின் வாகனமாக இருந்தது என்று ஒரு உணர்வு தோன்றிவிட்டது. அவள் கடமையை முடித்து ஸ்டூடியோவிற்கு வெளியே வந்த பிறகே தன் உறவினர்களை அழைக்கத் தொடங்கினார் “என ஒரு மூத்த ஆசிரியர் கூறினார்.
ஆசிரியருக்கும் ஊழியர்களுக்கும் கவுர் செய்திகளைப் வாசிக்கும்போது அவளது கணவர் இறந்துவிட்டார் என்று தெரிந்து கொண்டிருந்தாலும், அதனை வகவுரிடம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை ” என ஆசிரியர் விளக்கினார்.
எப்படியாகிலும், கவுரின் தைரியம் ஒப்பிடமுடியாதது. ஒரு சக பத்திரிக்கையாளராய் அவரின் தைரியத்தினை மெச்சும் அதே வேளையில், அவரது துயரத்திற்காக வருந்துகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.